Skip to main content

பாவம் கரோனாவே கன்ஃப்யூஸ் ஆகப்போவுது... அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

dmk

 


தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்த பீலா ராஜேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பீலா ராஜேஷை வணிக வரித்துறை செயலாளராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணனை மீண்டும் நியமித்துள்ளது தமிழக அரசு. மேலும் ஜெ.ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2012- 2019 வரை சுகாதாரத்துறை செயலாளராகப் பணியாற்றி அனுபவம் உடையவர் ஜெ.ராதாகிருஷ்ணன். தற்போது ஜெ.ராதாகிருஷ்ணன் கரோனா தடுப்புச் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், கட்சிக்குள் அதிகாரப் போட்டி, ஆட்சியில் கமிஷன் போட்டி, மத்திய அரசிடம் மண்டியிடும் அடிமை போட்டி... இதனால் கரோனா தடுப்புப் பணிகள் வெறும் மீடியா பேட்டிகள், அறிக்கைகளில் மட்டுமே நடக்கின்றன. கரோனா காலத்திலாவது செயல்படுங்கள் முதல்வர் அவர்களே என்றும், ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு பீலா நியமனம். அதே ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னைக்கு ஒரு குழு. 6 அமைச்சர்கள் கொண்ட மேற்பார்வை குழு. இவர்களை ஒருங்கிணைக்க பங்கஜ்குமார் நியமனம். தற்போது பீலா மாற்றப்பட்டு மீண்டும் ராதாகிருஷ்ணன். பாவம் கரோனாவே கன்ஃப்யூஸ் ஆகப்போவுது என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்