Published on 16/03/2018 | Edited on 16/03/2018

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.,எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீர்மானத்தை முன்மொழிந்தனர். அதிமுகவினர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்தை வழிமொழிந்தனர்.


