தமிழகத்தில் நடக்கும் கரோனா நிவாரண பணிகளை கவனிக்க ஸ்பெஷலாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வாலை நியமித்துள்ளார் மோடி. அதனால் மேக்வால் தமிழக நிவாரண பணிகளை உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சேலம், சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு, எந்த விதமான நிவாரணத் தொகையும் போகவில்லை என்கிற தகவலை, மேக்வாலின் கவனத்துக்கு அவரோட தனி உதவியாளர் ப்ரித்விக் கொண்டு சென்றுள்ளார்.

இதனால் ஷாக்கான மேக்வால், இதுகுறித்து மத்திய பஞ்சாயத்துத் துறை அமைச்சரான நரேந்திரசிங் தோமரிடம் விவாதித்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் மேற்கொண்ட முயற்சியால் 75,000 கோடி ரூபாய் தமிழகத்துக்கு உடனடியாக சேங்ஷன் செய்யப்பட்டு, அது பயனாளிகளுக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது. இப்படி பார்த்துப் பார்த்து தமிழகத்தைக் கவனிக்கிறது பா.ஜ.க. தரப்பு என்கின்றனர்.