Published on 11/02/2018 | Edited on 11/02/2018
![congress1](http://image.nakkheeran.in/cdn/farfuture/vUsuulix-4BuPPpsbNl2E90hJ-XFwI9lWgDmLwnqMQg/1533347644/sites/default/files/inline-images/congress1.jpg)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் நாளை 12.2.2018 அன்று தமிழக சட்டப்பேரவையில் திறந்து வைக்கப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’வருமானத்திற்கும் அதிகமான சொத்து சேர்த்த ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை தமிழக சட்டமன்றத்தில் பேரவை தலைவர் திறந்து வைப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இந்த முயற்சியை கைவிட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக சட்டமன்றத்தில் நாளை நடக்கவிருக்கிற ஜெயலலிதா உருவப்பட திறப்பு நிகழ்ச்சி்யில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.’’