கரோனா குறித்து பல்வேறு தகவல்களை தினமும் பிரதமர் மோடிக்கு அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் பாமக அன்புமணி ராமதாஸ். முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் என்கிற முறையிலும், டாக்டர் என்கிற முறையிலும் இவருடைய தகவல்களுக்கு மிக முக்கியத்துவம் தருகிறது பிரதமர் அலுவலகம்.
அண்மையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் பேசிய பிரதமர் மோடி, அன்புமணியிடமும் கரோனா குறித்து சீரியஸாக விவாதித்தார். அந்த விவாதத்தின்போது, முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் என்கிற முறையில் உங்களின் ஆலோசனைகள் எங்களுக்குத் தேவை. உங்களின் யோசனைகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என உரிமையுடன் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்தே மருத்துவத் தகவல்களை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தபடி இருக்கிறார் அன்புமணி. இந்த நிலையில், அன்புமணியிடம் அவ்வப்போது ஆலோசிக்குமாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அன்புமணியிடம் விவாதிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.