Skip to main content

மாதந்தோறும் ரூபாய் 4 ஆயிரம் உதவித் தொகை அளிக்க நடவடிக்கை - அமமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தினகரன்

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

 

அமமுக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கொள்கைப்பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் செந்தமிழன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

ttv

 

ttv3444ttv66


தேர்தல் அறிக்கையில், பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தப்பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும். மத்திய, மாநில அரசுப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மாதம் 100 ரூபாய் மானியம் அளிக்கப்படும். தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூபாய் 2 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஆசிரியர் தகுதி தேர்வு முறையில் மாற்றம் அல்லது ரத்து செய்யப்படும். அனைத்து விவசாய கடன்கள், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். வயதான விவசாயத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 4 ஆயிரம் உதவித் தொகை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்