Skip to main content

உச்சகட்டத்தில் அதிமுக - திமுக மோதல் : புதுக்கோட்டை பதற்றம்

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
add

 

புதுக்கோட்டையில் கடந்த ஒரு வாரமாக அதிமுக - திமுக இரு கட்சிகளின் போட்டி ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பாக உள்ளது. 
      அதாவது அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி புதுக்கோட்டையில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரை அவதூறாக பேசியதாக திமுகவினர் ராமலிங்கம், தென்னலூர் பழனியப்பன் மீது அதிமுகினர் கொடுத்த புகாரில் ராமலிங்கம் கைது செயயப்பட்டார். பழனியப்பனை கைது செய்யக் கோரி அதிமுக வினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தூண்டுதலில் விராலிமலையில் பழனியப்பனின் பெட்ரோல் பங்க் மீது தாக்குல் நடத்தியவர்கள் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு 24 ந் தேி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக ஒ.செ. இளங்குமரன் காவல் துறையில் அனுமதி கேட்டிருந்தார். அதே நேரத்தில் திமுகவினரின் கவனத்தை திசைதிருப்பும் விராலிமலையில் திமுக வினர் கூடுவதை குறைக்கவுமாக அதிமுக தரப்பு புதுக்கோட்டையில்  ரகுபதி எம்.எல்.ஏ. வின் வீடு, கல்லூரி, திமுக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த புதுக்கோட்டை அதிமுக ந.செ. பாஸ்கர்,  மாவட்ட எஸ் பி செல்வராஜிடம் அனுமதியும் பாதுகாப்பும் கேட்டிருந்தார்.


இரு பெரும் கட்சிகளும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால் மிகப் பெரிய மோதல்கள் உருவாகி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளாக கருதி திமுக வினர் கேட்டிருந்த  ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இலுப்பூர் டி எஸ் பி சரகத்திற்குள் கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
   ஆனால் அதிமுக தரப்பினருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.


   திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி திமுக விராலிமலை ஒ.செ. இளங்குமரன் திங்கள் கிழமை காலை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்வதாக கூறப்படுகிறது.
  ஆனாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக - திமுக மோதல் உச்சகட்டத்தில் உள்ளது.


  

சார்ந்த செய்திகள்