The Facebook post posted by OPS's son regarding the Kodanad Issue caused a stir!

'கொடநாடு கொலை வழக்கில் நீதி வேண்டும்' என்று ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சில ஆண்டுகளுக்கு முன் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிப்படை போலீசாரும் இதுவரை 200 மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கிடையே மறுபுறம் அதிமுகவில் ஒற்றைத் தலைமை சூடுபிடித்துள்ள நிலையில் 'கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் நீதி வேண்டும்' என்று தமிழக அரசுக்கு ஓபிஎஸ்சின் இளைய மகனான ஜெயபிரதீப் ஒரு கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

அந்த பதிவில்,

'உண்மை ஒருநாள் வெல்லும்

கொடநாடு சம்பவம் பற்றி நான்கு வருடமாக நான் எதுவும் பேசவில்லை என்று சில நண்பர்கள் கூறியிருக்கிறார்கள் அவர்களுக்கு தகுந்த விளக்கத்தினை நான் கூற கடமைப்பட்டிருக்கிறேன். எங்களது தெய்வம் குடியிருந்த கோயிலானபங்களாவில் சம்பவம் நடந்த ஆண்டு அதிமுக ஆட்சி புரிந்து கொண்டிருந்தது. மூன்று ஆண்டுகள் நல்லதொரு தீர்ப்பு வரும் என்று பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தேன்.

அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது அடுத்த அரசாங்கம் இந்த வழக்கை விரைவாக முடித்து தீர்ப்பு வழங்குவார்கள் என்று அமைதியாக காத்துக் கொண்டிருந்தேன். இரண்டு தினம் முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த கொடநாடு சம்பவத்தைப் பற்றிய தொகுப்பை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. நேற்றைய என்னுடைய பதிவில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது.

Advertisment

pp

மற்றவர்கள் மீது சந்தேகப்படுவதற்கு நான் காவல்துறையும் இல்லை பத்திரிக்கையாளரும் இல்லை சாதாரண மக்களின் ஒருவன்.ஒன்றரை கோடி தொண்டர்களையும் தனது பிள்ளையாக கருதிய எனது தாய் வீட்டில் இந்த அநீதி நடந்திருக்கிறது இதற்கு நியாயம் கேட்க எங்கள் அம்மாவின் பிள்ளையாக எனக்கு கடமை இருக்கிறது. இந்த கொடநாடு சம்பவத்தை காலதாமதம் செய்து கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது.

நமது கட்சிக்கு மேலும் கலங்கப்படுத்தாமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் . இந்த வழக்கை விரைவாக முடித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கழக உண்மை தொண்டனின் எண்ணத்தை தான் நான் பதிவிட்டு இருந்தேன்' தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக வும் பரவி வருகிறது. அதேபோல் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.