2017 ஜூலை 12ல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோளின்படி அவரை சந்தித்தேன். அவர் என்னை சந்தித்தது உண்மை. தான் செய்தது தவறு என்றும், பழனிசாமியை எதிர்க்க என்னுடன் சேர்வதாகவும் பன்னீர்செல்வம் கூறினார். பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் என்று டிடிவி தினகரன் 05.10.2018 வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.
இதற்கு ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முனுசாமி, அதிமுகவினரை குழப்ப வேண்டும் என்பதற்காக இப்படி பேசுகிறார்கள் என்று கூறினார். அமைச்சர் தங்கமணி, தினகரனை ஒருபோதும் ஓ.பன்னீர்செல்வம் ஏற்க மாட்டார் என்றார்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அ.ம.மு.க. செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி:-
ஜானகி அம்மாள் அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தியது, லோக்கல் அரசியலில் இருந்தவரை சென்னைக்கு அழைத்து வந்து மாவட்டச் செயலாராக்கியது தினகரன்தான் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்தது.
முதல் அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக தர்மயுத்தம் நடத்தினார். பாரத பிரதமர் சொன்னதன் பேரில்தான் துணை முதல் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதாக ஓ.பன்னீர்செல்வமே சொன்னார்.
ஆனால் தற்போது அவருக்கு அங்கு என்ன மரியாதை கிடைக்கிறது என்பதை எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஓரம்கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் எல்லோரும் பேசினார்களே தவிர, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
2017ல் தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து உண்மை. இந்த விஷயத்தை தினகரன் இப்போது சொல்லக் காரணம், ஒருபக்கம் எங்களுக்கு தூது விடுகிறீர்கள். இன்னொரு பக்கம் மேடையில் தாக்கி பேசுகிறீர்கள் என்பதற்காகத்தான் அக்டோபர் 2ஆம் தேதி, இருவருக்கும் பொதுவான நண்பர் மூலமாக ஓ.பி.எஸ். தூது அனுப்பினார் என்று தினகரன் சொன்னார். 10 அமைச்சர்களை தவிர யார் வந்தாலும் அமமுகவில் இணைந்து கொள்வார் தினகரன்.
நாங்கள் பேசியிருப்பது ஓ.பன்னீர்செல்வம் பற்றிதான். தங்கமணி ஏன் இதற்கு பதில் சொல்கிறார். ஓ.பன்னீர்செல்வம் பதில் சொல்ல வேண்டியதுதானே. இதே தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதும், பழனிசாமியை முதலமைச்சரா ஆக்கலாமா என கேட்டவர்கள்தான் தங்மணியும், வேலுமணியும். இவர்கள் இருவரும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க புறப்பட்டவர்கள்தான். அதன்பிறகு இப்போது ஒன்றாக இணைந்துவிட்டார்கள். ஊழல் பண்ணுகிறார்கள். கொள்ளையடிக்கிறார்கள் என்றார்.