கரோனா பொது முடக்கத்துக்கு மத்தியிலும் இரண்டு சர்வேக்களை எடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! அந்த சர்வேக்களில் அதிமுகவுக்கு சாதகமான ரிசல்ட் ஒரு முறையும், பாதகமான ரிசல்ட் ஒருமுறையும் கிடைத்துள்ளது. சாதகமாக வருவதற்கு என்ன காரணம்? பாதகமாக வந்ததற்கு என்ன காரணம்? என்பது குறித்து எடப்பாடியின் தேர்தல் ஆலோசகர்கள் அலசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே, இந்த சர்வேக்களின் முழுமையான தகவல்களும் திமுக தலைமைக்கு கிடைத்து விடுகிறதாம். சர்வே விசயங்கள் மட்டுமல்ல ; அதிமுகவில் ரகசியமாக நடக்கும் விவாதங்கள், எடுக்கப்படும் முடிவுகள் கூட அறிவாலயத்துக்கு கிடைத்து விடுகிறது. இதனை அறிந்துள்ள உளவுத்துறை, அதிமுகவில் ரகசியம் பாதுகாக்கப்படுவதில்லை என்று எடப்பாடிக்கு தகவல் தந்துள்ளதாம். இதனை அடுத்து அதிமுக ரகசியங்களை திமுகவுக்கு கசிய விடும் ஸ்லீப்பர் செல் யார் ? என்கிற கேள்விக்கான பதிலை விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளாராம் எடப்பாடி!