Published on 04/06/2019 | Edited on 04/06/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 38 இடங்களையும்,இடைத்தேர்தலில் 13 இடங்களையும் பெற்றது.இதனால் தமிழகத்தில் அதிமுக,பாஜக கூட்டணிக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள் உள்ளனர் என்று அனைத்து தரப்பினரும் கூறி வந்தனர்.இந்த நிலையில் அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் கொண்டு வர சில வியூகங்களை வகுத்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இந்த தகவலை உளவுத்துறை மூலம் அறிந்த எடப்பாடி, திமுக உறுப்பினர்கள் வீடுகளில் ரெய்டு நடத்த திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.அதிமுகவுக்கு ஆதரவாக 123 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். ஆனால் தினகரன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மூவரும்,கருணாஸும் சேர்த்தால் மொத்தமாக 119 எம்.எல்.ஏ.க்கள் தான் அதிமுகவிற்கு ஆதரவாக உள்ளனர். இதனால் இன்னும் சில எம்.எல்.ஏக்களை அதிமுகவில் இருந்து இழுக்க திமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.இந்த தகவலால் எடப்பாடி தரப்பு பதற்றத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.