நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி பாஜக ஒவ்வொரு மாநிலத் தலைமைக்கும் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது. மராட்டியத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பா.ஜனதா கட்சி எம்.எம்.ஏ.க்கள் தேர்தலுக்காக வகுக்கவேண்டிய திட்டங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எப்படி பிரசாரம் மேற்கொள்ளவேண்டும். மக்களை எப்படி சென்று அடையவேண்டும் என்பது குறித்து கட்சியில் உள்ள 121 எம்.எல்.ஏ.க்களுக்கும் விரிவான பட்டியல் வழங்கப்பட்டு உள்ளது.
மகாத்மா காந்தி பிறந்து 150 ஆண்டுகள் நடந்து வருகிறது. இதனை நினைவுகூறும் வகையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குறைந்தது 150 கிலோமீட்டராவது நடந்து சென்று வாக்காளர்களை சந்திக்கவேண்டும். எம்.எல்.ஏ.க்கள் காந்தியின் நினைவு நாளுக்குள் இதை செய்துமுடிக்க வேண்டும் என்று மாநில பாஜக தலைமை கட்சி எம்எல்ஏக்களுக்கு அறிவுத்தியுள்ளது.
இந்தநிலையில் மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் சிலர், விவசாயிகள் பருவமழை பொய்த்ததால் கவலையில் உள்ளனர். பருவ பயிர் விதைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரமே ஆபத்தில் உள்ளபோது எப்படி ஓட்டு கேட்டு அணுக முடியும். பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் எப்படி பதில் சொல்வது என்று அதிருப்தியில் உள்ளனர்.