உலகில் உள்ள சமூக வலை தளங்களில் முக்கியமானதாக உள்ள "வாட்ஸ் ஆப்" செயலியை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் ஆப் குரூப் மற்றும் Forward Message உண்மையான தகவலா? என்ற சந்தேகம் எழுந்தால் வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்தியர்களுக்கென்று பிரத்யேக சேவை எண் : (+91-9643-000-888 ) என்ற எண்ணை அறிவித்துள்ளது. இதன் படி வாட்ஸ் ஆப் பயனாளர்கள் தங்களுக்கு வரும் தகவல் மற்றும் வீடியோக்கள் உண்மையானதா? என்ற சந்தேகம் எழுந்தால் இந்த வாட்ஸ் ஆப் சேவை எண்ணுக்கு தகவல் அனுப்ப வேண்டும் .
அதன் பின் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் குழு தாங்கள் அனுப்பிய தகவலை ஆராய்ந்து சமந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் சரியானதா? தவறானதா? என்பதை கூறும். மேலும் இந்திய வாட்ஸ் ஆப் சேவை எண் குழு ஆங்கிலம் , ஹிந்தி, பெங்காலி , மலையாளம் , தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இயங்குகிறது. எனவே வாட்ஸ் ஆப் பயனாளர்கள் இந்த ஐந்து மொழிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தங்களுக்கு வரும் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதே போல் தற்போது இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் தவறான தகவல்கள் பரவுவதை இதன் மூலம் தடுக்கலாம். இத்தகைய சேவையை வாட்ஸ் ஆப் நிறுவனம் முதன் முறையாக இந்தியாவில் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.சந்தோஷ் , சேலம் .