Skip to main content

வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் புகைப்படம்... குழப்பமடைந்த முதியவர்...

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

திருத்தம் செய்யப்பட்டு வந்த புதிய வாக்காளர் அடையாள அட்டையில், தனது புகைப்படத்திற்குப் பதிலாக நாயின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதாக முதியவர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

 

west bengal man gets voter id with dogs photo in it

 

 

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள ராம் நகர்ப் பகுதியில் வசிப்பவர் சுனில் கர்க்கர். இவர் தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக விண்ணப்பித்திருந்துள்ளார். இந்நிலையில், திருத்தப்பட்ட தனது வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்ற அவர், அதில் தனது புகைப்படத்திற்குப் பதிலாக நாய் ஒன்றின் புகைப்படம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து குழப்பமடைந்த அவர், இந்த தவறு குறித்து புகாரளித்துள்ள நிலையில், அவரது புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது எனவும், விரைவில் அவர் சரியான புகைப்படத்துடன் சரிசெய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையைப் பெறுவார் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பட்டப்பகலில் கட்டி வைத்துத் தாக்குதல்; நிலைகுலைந்த பெண் - பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 woman and a man were tied up and beaten in public in West Bengal

மேற்கு வங்கம் மாநிலத்தில் பொதுவெளியில் ஒரு பெண்ணையும், ஆணையும் கட்டி வைத்து தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கம் மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துவருவதால், பாஜகவினர் இந்த வீடியோவை பகிர்ந்து கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்தச் சம்பவம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் நடந்துள்ளது. வீடியோவில், ஒரு ஆணையும், பெண்னையும் மூங்கில் கம்பால் சரமாரியாக ஒருவர் தாக்குகிறார். அதனைப் பொதுமக்கள் தடுக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துகொண்டும், செல்போனில் படம் பிடித்துக்கொண்டு உள்ளனர். அடி தாங்க முடியாமல் பெண் நிலைகுலைந்து போயுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இருவர் மீதும் தாக்குதல் நடத்தியவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தாஜேமுல் என்று அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலா செயலாளர் தெரிவித்துள்ளார். வீடியோவில் தாக்கப்படும் ஆணும், பெண்ணும் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், கட்டபஞ்சாயத்து அடிப்படையில் இருவருக்கும் பிரம்படி தண்டனை கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த இஸ்லாம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாஜேமுல் சோப்ரா தொகுதி திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹமிதுர் ரஹ்மானுக்கு நொருக்கமானவர் என்று குற்றம் சாட்டிய பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தகவல் தொழில்நுட்ப தலைவர் அமித் மாளவியா, “மம்தா தலைமையிலான அரசில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. மம்தா பெண்களின் சாபக்கேடு. தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

சென்னை கோயம்பேட்டில் தீவிரவாதி கைது!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
West Bengal person arrested in Chennai

உபா வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அனோகர் (வயது 30) என்ற தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ள்ளார். இவர் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடையவர் ஆவார். மேலும் இவர் ‘அன்சார் அல் இஸ்லாம்’ என்ற தீவிரவாத அமைப்பில் தொடர்புடையவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பதுங்கியிருந்த அனோகர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஹபிபுல்லா என்ற தீவிரவாதி கொடுத்த தகவலின் பேரில் அனோகர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உபா சட்டம், தாக்குதல் நடத்த திட்டமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மேற்கு வங்க போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.