Skip to main content

பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

kl;

 

மத்தியப் பிரதேச மாநிலம் பாட்னா அருகே 54 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து  கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 32 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு மாநிலப் பேரிடர் மீட்புப் படை விரைந்து வந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

 

சம்பவ இடத்திற்கு இதுவரை இரண்டு அமைச்சர்களை மாநில அரசு அனுப்பியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இன்று இரவுக்குள் மீட்புப் பணிகள் நிறைவடையும் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.


 

 

சார்ந்த செய்திகள்