Published on 22/01/2021 | Edited on 22/01/2021

இந்தியாவில், கரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில், நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடத்தில், நடைபெற்ற வெல்டிங் பணியின்போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் வழங்கப்படும் என சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இது எதிர்காலத்தில் பிசிஜி மற்றும் ரோட்டா தடுப்பூசிகளின் உற்பத்தியைப் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.