![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/BLDtH7h5Tb8z9MPDkgEethpKQOzxMGJ9GPuL-7Y9Fa4/1603259373/sites/default/files/inline-images/500_69.jpg)
தெலங்கானா மாநிலம் பத்ராச்சலம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், மனைவிக்குத் தெரியாமல், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இது அரசல் புரசலாக தெரியவர, மனைவி கண்டித்துள்ளார். இருப்பினும் சுபாஷ் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இந்நிலையில், வேலைக்குச் செல்வதாகக் கூறி வெளியே சென்ற சுபாஷ், தனது காதலியுடன் லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்துள்ளார்.
இதனைத் தெரிந்து கொண்ட மனைவி, தனது உறவுக்காரர்களுடன் சென்று, கணவருடன் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் சரமாரியாக அவரை அடித்து உதைத்தார். கணவருடன் இருந்த காதலிக்கும் தர்ம அடி விழுந்தது.
பொறியில் மாட்டிக் கொண்ட எலி போல, கையும் களவுமாக சிக்கிக் கொண்ட சுபாஷை, மனைவியின் உறவினர்களும் செமத்தியாக 'கவனித்து' பின்னர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெலங்கானா போலீஸார் தெரிவித்துள்ளனர்.