KATRINA KAIF

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு அம்மாநில அமைச்சரவை ஒட்டுமொத்தமாக மாற்றம் செய்யப்பட்டது. இதில், ராஜேந்திர சிங் குதாஎன்ற எம்.எல்.ஏவுக்கு பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளின் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

Advertisment

இந்தநிலையில் அமைச்சர்ராஜேந்திர சிங் குதா, தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்ராஜேந்திர சிங் குதா, தனது தொகுதி மக்களிடம் உரையாடுகிறார். அப்போது மக்களில் சிலர், தங்கள் பகுதியில் சாலைகளைசீரமைக்க வேண்டும் என அமைச்சரிடம் முறையிடுகின்றனர்.

Advertisment

உடனே அமைச்சர்ராஜேந்திர சிங் குதா, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளரைப் பார்த்து,"எனது தொகுதியில், கத்ரீனா கைஃபின் கன்னங்களைப் போல் சாலைகள் அமைக்கப்பட வேண்டும்" என கூறுகிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவரும் நிலையில், அமைச்சரின்பேச்சுக்குக் கண்டனங்களும் எழுந்துள்ளன.