மத்திய பிரதேச மாநிலத்தில் டிக்கம்கர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டாவது மாடியில் விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரெனெ தவறி கீழே விழ முயன்ற போது, எதிர்பாராத விதமாக அந்த சாலை வழியே வந்த ரிக்ஷா வாகனத்தில் விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதை பார்த்து உடனடியாக வெளியே சென்ற பெற்றோர் ரிக்ஷ்வில் இருந்த குழந்தையை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
![MADHYA PRADESH CHILD INCIDENT ADMIT AT HOSPITAL](http://image.nakkheeran.in/cdn/farfuture/OlaMWsIFaclkXMr4vwdQeTUeh5429ZQqtscHJkCqSKE/1571565934/sites/default/files/inline-images/R10.jpg)
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய குழந்தையின் தந்தை ஆஷிஷ் ஜெயின், குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூறினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் குழந்தை ரிக்ஷா வாகனத்தில் விழும் காட்சி, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#WATCH #MadhyaPradesh pic.twitter.com/3yDOzZmB9y
— ANI (@ANI) October 20, 2019