இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, ஜியோ உள்ளிட்டவை நஷ்டக்கணக்கு காட்டி வரும் நிலையில் வருங்காலத்தில் கட்டணங்களை உயர்த்தபோவதாக அறிக்கைகள் கடந்த வாரத்தில் வெளிவந்தது.
![bsnl](http://image.nakkheeran.in/cdn/farfuture/8VmcbOX7SBG_Ugg8F1oak2YhWqmlkXhAZT5pIkFhKgQ/1574327632/sites/default/files/inline-images/bsnl_6.jpg)
இந்நிலையில் இந்திய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என். எல், ஒரு அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது. அதில், ரூ.1699க்கு 365 நாட்களுக்கு தினசரி 250 நிமிடம் கால்கள் இலவசம், தினசரி 2 ஜிபி இணையவசதி மற்றும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம் என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், நவம்பர் மாதத்திற்குள் பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு சேவை பயன்படுத்தி இந்த ஆஃபரை அனுகுவர்களுக்கு 365+60 நாட்கள் இலவசம் என்று தெரிவித்துள்ளது.
அண்மையில்தான் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி இணையசேவைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த அறிவிப்பு ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.
![Kamal](http://image.nakkheeran.in/cdn/farfuture/b1z90GjeKFuHHcl8CZebNhCk6oAQkagSZan4vXr3oLE/1574331465/sites/default/files/inline-images/kamal-ilayaraja_2.jpg)