பண்டிகை காலங்களில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி உச்சநீதிமன்றத்தில் நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்க மற்றும் வெடிக்க தடை செய்ய வேண்டும் என்ற அர்ஜுன் கோபால் என்ற 7 வயது சிறுவன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேசன் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த வாரம் இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு அறிவித்துள்ளது. அதில், சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். சரவெடிக்கான தடை தொடரும். ஏற்கனவே அமலில் இருக்கும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்ற நடைமுறை தொடரும்” எனத் தீர்ப்பளித்துள்ளனர். இதனிடையே பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் போரியம் மற்றும் சரவெடி தொடர்பாக அனுமதி கோரிய மனுவை ஏற்க முடியாது என்று கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.