Published on 04/09/2021 | Edited on 04/09/2021

அடுக்குமாடி கட்டடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.
மும்பையில் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் போரிவளி பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடி கட்டிடத்தின் 7 ஆவது அடுக்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடம் தகதகவென எரிந்து கரும்புகை சூழ்ந்தது. இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். அப்பொழுது தீயணைப்பில் ஈடுபட்ட வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரபரப்பான மும்பை நகருக்குள் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தினால் வானில் கரும்புகை சூழ்ந்தது அந்தப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.