
திண்டுக்கல்லில் மே 1.2 ஆகிய தேதிகளில் நடைபெற்று வரும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7வது மாநில மாநாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுலாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
மாநில துணைத்தலைவர்கள் தயாள தாஸ், தங்கபாசு ஆகியோர் தலைமையில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. நாமும் பண்பாடும் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பங்கேற்றுப் பேசினார். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அரவிந்த சாமி பேசினார். பிரதிநிதிகள் விவாதத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் மயில் தொகுப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
மாநாட்டில் மிக முக்கியமான தீர்மானமான பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தன் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆசிரியர்களுக்கு எவ்வித பலனையும் வழங்காத காரணத்தால் இத்திட்டத்தை அமுலாக்கும் திட்டத்தைக் கைவிட்டு தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் வகையில் தேர்தல் கால வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அறிவிக்க வேண்டும் என மாநாடு கேட்டுக் கொள்கிறது. 20 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் முதுநிலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், என பல்வேறு நிலைகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. அப்பணி இடங்களில் முறையான கால முறை ஊதியம் அடிப்படையில் நியமனம் செய்யாமல் தொகுப்பூதியம் மதிப்பூதியம் அடிப்படையில் காலிப்பணியிடங்களில் தகுதி பெற்றவர்களை நியமனம் செய்ய வேண்டும் என மாநாடு கேட்டுக் கொள்கிறது.
இந்தி திணிப்பைக் கைவிட வேண்டும். 3வது தீர்மானமாக ஒரு நாட்டில் பண்பாட்டை கலாச்சாரத்தை சிதைக்க வேண்டும் என்று நினைத்தால் மொழியை அழிக்க வேண்டும். அப்படிப்பட்ட அழித்தொழிப்பு செய்ய இந்தி திணிப்பை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கை முற்றாக கைவிட மத்திய அரசையும், மத்திய கல்வித்துறையையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. நீதியரசர் முருகேசன் குழு பரிந்துரைகளை அமுலாக்குக தேசிய கல்விக்கொள்கையில் பாதகமான அம்சங்கள் கொண்ட செயல்திட்டங்களைத் தமிழக அரசும், தமிழக அரசின்பள்ளிக்கல்வித்துறையும்செயல்படுத்தி வருவதைக் கை விட்டு தமிழ்கத்திற்கான கல்விக் கொள்கை அமலாக்கும் விதமாக நீதியரசர் முருகேசன் குழுவின் பரிந்துரைகளை அமலாக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.