Published on 02/05/2025 | Edited on 02/05/2025

செங்கல்பட்டில் காதலை ஏற்றுக் கொள்ளாத மாணவியை இளைஞர் பெட்ரோல் போற்றி எரித்த செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவர் தங்கி பயின்று வந்துள்ளார். இவர் ரத்தினகுமார் என்ற இளைஞரை ஒன்பது வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இருவீட்டார் பெற்றோரும் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் கல்லூரி மாணவி ரத்தினகுமாரிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டதோடு காதலையும் முறித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ரத்தினகுமார் கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் ரத்தினகுமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.