Published on 12/10/2018 | Edited on 12/10/2018
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் மிக உயர்ந்த சிலை, கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சிலை குஜராத்திலுள்ள நர்மதா நதிக்கரையில் கட்டப்பட்டு வருகிறது. வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட இருக்கிறது.
ஒற்றுமையின் சிலை என்று பெயரிடப்பட்டுள்ள இச்சிலை உலகின் மிக உயரிய சிலை ஆகும். சர்தார் பட்டேலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 182 மீட்டர் உயரம் கட்டப்படுகிறது. இது சது தீவு என்னும் நர்மதா நதிக்கரையோரம் கட்டப்படுகிறது. மேலும் இச்சிலையில் 153 மீட்டரில் நின்று மக்கள் இந்த பரந்த உலகை பார்க்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.