டெல்லியில் 38- வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று (18.12.2019) நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர், நிதித்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி தொடர்பாக மாநில அமைச்சர்களுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை செய்தார்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை செயலாளர் ஏ.பி.பாண்டே, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட லாட்டரிக்களுக்கான ஜிஎஸ்டி வரி 28% என்றும், 2020 மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்தார். இருப்பினும் தமிழகத்தில் அனைத்து வகையான லாட்டரிகளுக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.