
19 வயது பெண்ணை அவரது மாமாவுடன் நெருங்கிப் பழக வற்புறுத்தி, கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியில் கடந்த 1ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாய் மாமாவும் தங்கள் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது, மோட்டார் சைக்களில் வந்த இரண்டு ஆண்கள், அவர்கள் முன்பு வந்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
தங்கள் செல்போனில் படம் பிடித்துக் கொண்டு இருவரும் நெருக்கமாக இருக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அந்த இரண்டு ஆண்கள், மாமா முன்னிலையில் அந்த பெண்ணை மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன் பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து மூக்குத்தி மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட அமோஸ் நாராயண் போட் (25) மற்றும் கிஷோர் ரம்பாவ் காலே (29) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.