Skip to main content

அடுத்த மராட்டியமா கர்நாடகா... தேர்தல் முடிவை எதிர்நோக்கும் எதிர்க்கட்சிகள்!

Published on 04/12/2019 | Edited on 05/12/2019


கர்நாடக மாநிலத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ க்களின் தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலத்தின் 15 தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜ.க. குறைந்தபட்சம் 6 இடங்களையாவது கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும். அந்தவகையில், பா.ஜ.க. கட்சியை பொறுத்தவரை இந்தத் தேர்தல் ஒரு வாழ்வா சாவா போராட்டம் என்றாலும் மிகையில்லை.



அதேசமயம், எதிர்கட்சிகளும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தங்களது செல்வாக்கை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. காங்கிரஸ்-மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததால் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியான தொகுதிகளுக்கு தேர்தல் டிசம்பர் 5 என்று அறிவிக்கப்பட்ட நாள் முதல் கர்நாடகத்தின் அரசியல் களம் பரபரப்பாகவே இருந்து வருகிறது. 
 

 

சார்ந்த செய்திகள்