நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில் இன்று 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தி வருகிறார்.
மத்திய பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கர்நாடக மாநிலத்திற்கு ரூ. 5,300 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வறட்சி சமாளிப்பு, பாசனம் மற்றும் குடிநீர் வசதிகளுக்காக மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் கர்நாடக மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், அதனைக் குறி வைத்தே பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கோஷங்களை எழுப்பினர்.
மேலும், ரயில்வே துறை திட்டங்களை செயல்படுத்த ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 9 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.