
புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ளது மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி. இந்த கல்லூரியில் செக்யூரிட்டிகளாக கடந்த 8 ஆண்டுகளாக காரியாம்புத்தூர் பகுதியை சார்ந்த விஜயா, கண்ணியகோவில் பகுதியை சார்ந்த ஜெயந்தி, கடலூரை சார்ந்த தனலட்சுமி ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்களை கடந்த வெள்ளிக்கிழமை எந்த காரணமும் இன்றி வேலையை விட்டு சென்று விடுமாறு நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. மேலும் அவர்கள் மீது வழக்கும் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண்கள் 3 பேரும் நிர்வாகத்தின் ஹெச். ஆர். மேனேஜர் பாலமுகுந்தன் , செக்யூரிட்டி எஸ் ஓ ராஜா ஆகியோர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், உடன்படாததால் வேலை இல்லை என்று வெளியேற்றியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.