Published on 09/01/2020 | Edited on 09/01/2020
நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் அதனை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ஜார்க்கண்ட் முதல்வர் வாபஸ் வாங்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிட்டதட்ட 3000 நபர்கள் மீது போடப்பட்டிருந்த தேச துரோக வழக்கை அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வாபஸ் வாங்கியுள்ளார்.