/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dsg_189.jpg)
கர்நாடகாவில் இன்று 3,222 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 14,724 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 27,19,139 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,36,298 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 85,997 ஆக உள்ளது. மேலும் இன்று மட்டும் 93 பேர் கரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக கரோனாவுக்கு 34,929 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 40 நாட்களுக்கு முன்பு வரை 40 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் தினசரி பாதிப்பு இருந்த நிலையில், தற்போது அது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் விதிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)