Published on 12/01/2022 | Edited on 12/01/2022
"இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தலைவராக சோமநாத் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்" என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராகவும் சோமநாத் பணியாற்றியுள்ளார்.
இந்திய அரசின் முதன்மையான, தேசிய விண்வெளி முகமை இஸ்ரோ ஆகும். பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இஸ்ரோ 1969- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதி அன்று உருவாக்கப்பட்டது.
இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சிவனின் பதவிக்காலம் முடிந்து, ஓராண்டு காலம் நீட்டிப்பில் இருந்த நிலையில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.