பாரத ஸ்டேட் வங்கி தனது ஏ.டி.எம் களில் பணமெடுக்க ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது.

இந்த புதிய விதிகளின்படி, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் களில் 10,000 ரூபாய்க்கு மேல் பணமெடுக்கும் போது ஓ.டி.பி எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. 2020- ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் முறையில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இது சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் களில் 10,000 ரூபாய்க்கு மேல் பணமெடுக்கும் போது, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி (OTP) வரும். இந்த ஓடிபி எண்ணை பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும். எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்கள், வேறு வங்கி ஏ.டி.எம் மூலமாக பணம் எடுக்கும் போது, ஓ.டி.பி இல்லாத பழைய முறையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.