Skip to main content

இந்தியாவில் இதுவரை 3.07 கோடி பேருக்கு மேல் கரோனா!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

Corona has more than 3.07 crore people in India so far!

 

இந்தியாவில் இதுவரை 3.07 கோடி பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (09.07.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 3,07,09,879 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 43,393 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

நேற்று ஒரேநாளில் 44,459 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,98,88,284 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 97.18 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.32 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் கரோனாவுக்கு 911 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,05,939 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவிற்கு 4,58,727 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்