Published on 23/01/2020 | Edited on 23/01/2020
டெல்லியில் ஜனவரி 26- ஆம் தேதி குடியரசுத்தின விழாவில் பங்கேற்பதற்கு முன் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியுடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்துகின்றனர். முதன் முறையாக இந்தாண்டு குடியரசு தினத்தன்று பிரதமர் போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்திய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தனுஷ் பீரங்கி முதன் முறையாக குடியரசுத் தின விழா அணி வகுப்பில் இடம் பெறுகிறது. டி.ஆர்.டி.ஓ உருவாக்கிய செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுத அமைப்பும் முதல் முறையாக இடம்பெறுகிறது.