Published on 05/12/2018 | Edited on 05/12/2018

அருணாச்சல பிரதேசத்திலிருந்து, அசாம் செல்லும் வழித்தடத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 5 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். இந்தியாவின் நீளமான ரயில்வே பாலமான இது 2002 ல் வாஜ்பாய் அடிக்கல் நாட்டியது என்பதால், அவரது பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி இது திறக்கப்பட உள்ளது. 4857 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் மூலம் 100 கிலோமீட்டர் பயண தூரம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.