Skip to main content

புதுச்சேரி சட்டமன்ற துணை சபாநாயகராக எம்.என்.ஆர்.பாலன் போட்டியின்றி தேர்வு!

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

புதுச்சேரியில் நடைபெறும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சியில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அவர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய, அப்பதவிக்கு துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து கடந்த- 03 ஆம் தேதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனையடுத்து காலியாக உள்ள துணை சபாநாயகர் பதவிக்கு நாளை (05- ஆம் தேதி) தேர்தல் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். இப்பதவிக்கு போட்டியிட ஏதுவாக தனது  சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் பதவியை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.ஆர்.பாலன் ராஜினாமா  செய்து அதற்கான கடிதத்தை முதல்வர் நாராயணசாமியிடம்  வழங்கினார்.

puducherry state assembly deputy speakers mnr balan select majority of mla support


அதன் தொடர்ச்சியாக துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட எம்.என்.ஆர்.பாலன் இன்று காலை மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்களின் ஆதரவு பாலனுக்கு இருப்பதாலும், எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளர் யாரும் நிறுத்தப்படாததாலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.என்.ஆர்.பாலன் துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்