ஏர் இந்தியாவை முற்றிலும் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கடும் நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தை மீட்டெடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதுவுமே கைகொடுக்காத நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவது குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி , "முதல் தர விமான நிறுவனமாக ஏர் இந்தியா திகழ்கிறது. எனினும், விமானங்களை இயக்குவதை மத்திய அரசு நடத்தக் கூடாது என்றே விரும்புகிறது. எனவே ஏர் இந்தியாவை தனியார் நடத்த வேண்டும். இந்த தனியார்மயமாக்களை மிக குறுகிய காலத்தில் செய்துமுடிக்க விரும்புகிறோம். ஏர் இந்தியாவை நடத்த பலரும் ஆர்வமாக இருப்பதால், அதில் யாருக்காவது ஒருவருக்கு ஏர் இந்தியா விற்கப்படும்" என தெரிவித்தார்.