Published on 18/09/2019 | Edited on 18/09/2019
பிரதமர் மோடி நேற்று தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
![mamta banerjee gifts yasodhaben patel on modi birthday](http://image.nakkheeran.in/cdn/farfuture/xQAXd_k4uev4aiw_Arq2K1CcY6MhH68FSsA7mlDBQFo/1568789305/sites/default/files/inline-images/yasod.jpg)
1950 ஆம் ஆண்டு பிறந்த பிரதமர் மோடி நேற்று தனது 69 ஆவது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்கள், அரசியல்வாதிகள், உலக தலைவர்கள் என பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்காக அவரது மனைவி யசோதா பென்னுக்கு சேலை ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். மேற்கு வங்க மாநிலம், மேற்கு புர்தவான் மாவட்டத்தில் உள்ள அசான்சோல் பகுதியில் உள்ள கல்யானீஸ்வர் கோயிலுக்கு சிறப்பு வழிபாடு செய்வதற்காக பிரதமர் மோடியின் மனைவி நேற்று கொல்கத்தா வந்திருந்தார். அப்போது விமானநிலையத்திற்கு வந்த மம்தா பானர்ஜி, யசோதா பென்னை சந்தித்து அவருக்கு புடவை ஒன்றை பரிசாக வழங்கினார்.