
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில், சில தினங்களுக்கு முன்பு கணவனை 15 துண்டுகளாக வெட்டி டிரம்மில் அடைத்து வைத்து தனது ஆண் நண்பருடன் பலஇடங்களுக்குப் பயணம் மேற்கொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு குறித்து போலீசார் நடத்தி வரும் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டே இருக்கிறது. அதே சமயம், இந்த வழக்கு இணையத்தில் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக மனைவி காதலிக்கும் நபரை, கணவரே முன்னின்று திருமணம் செய்து வைக்கும் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்து வருகின்றது. சாண்ட் கபிர் நகரைச் சேர்ந்த பப்லு, தனது மனைவி வேறு ஒரு நபருடன் திருமணத்தை உறவு வைத்திருந்ததை அறிந்து அவருடனே தனது மனைவியை திருமணம் செய்து வைத்தார். மீரட் சம்பவத்திற்கு பயந்து தனது மனைவியை அவருடைய காதலுடன் திருமணம் செய்து வைத்ததாகத் தெரிவித்தாக பப்லு தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி நாடு முழுவதும் பேசுப்பொருளானது.
சாண்ட் கபிர் நகரில் மனைவிக்கு அவருடைய காதலனோடு கணவனே முன்னின்று திருமணம் செய்து வைத்த சம்பவம் போலவே, மற்றொரு இடத்தில் தற்போது நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் சிங். இவருக்கும் வைஷ்ணவி என்ற பெண்ணுக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆரம்பக் காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பாட்டது. இதன் காரணமாக, கணவர் ராகுலை பிரிந்து வைஷ்ணவி தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துளார்.
தனது வீட்டுக்கு வர மறுத்ததால், ராகுல் சிங் வைஷ்ணவி வீட்டுக்குச் சென்று பேசியுள்ளார். அப்போது தனக்கும், அதே ஊரைச் சேர்ந்த மனோஜ் என்ற நபருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ராகுல் சிங், தனது வைஷ்ணவியை அவர் காதலித்த மனோஜுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அதன்படி ராகுல் சிங், வழக்கறிஞரை வைத்து முறைப்படி விவாகரத்து கோரி அதனை பெற்றார். இதனையடுத்து, வைஷ்ணவிக்கும் மனோஜுக்கும் இடையே திருமணம் செய்து வைத்தார். அந்த புதிய திருமணத்தை சட்டப்படி ஆவணம் செய்து தன்னுடைய ஊருக்கு ராகுல் சிங் திரும்பியுள்ளார்.