இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக குஜராத்திற்கு வருகை புரிந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்று (17/06/2022) இரவு 09.00 மணியளவில் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரதமரை, குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் ஆளுநர் ஆச்சார்ய தேவ் விராத்,மாநில அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து, இன்று (18/06/2022) காலை 07.00 மணியளவில் காந்திநகரில் உள்ள தனது தாயார் இல்லத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது தாய் ஹீராபென்னின் 100- வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு மாலை அணிவித்து, பாதங்களுக்குப் பாத பூஜை செய்து வாழ்த்துப் பெற்றார். பின்னர், அவரது காலில் விழுந்தும் ஆசி பெற்றார். அத்துடன், வீட்டில் உள்ள பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபட்டார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று காலை 11.00 மணியளவில் வதோதரா மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர், சுமார் 21,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றவிருக்கிறார்.