Skip to main content

கரோனா வைரஸ் எதிரொலி... டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மூடல்!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் 1,09,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்று காரணமாக 3800 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாதம் முதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் கரோனா, தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 62 ஆக உயர்ந்துள்ளது.

 

coronavirus issue - Delhi schools and colleges Closed

 இந்நிலையில் இந்த வைரஸ் பரவி வருவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் வரும் 31ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.   

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கிட்ஸ் ஃபேவரைட்; கேம்லின் நிறுவனத்தின் தலைவர் காலமானார்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
90s Kids Favorite; The chairman of Camlin Company has passed away

கேம்லின் நிறுவனத்தின் தலைவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்த பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

80, 90 கிட்ஸ் பள்ளி மாணவர்கள் முதல் தற்போதைய 2கே பள்ளி மாணவர்கள் வரை பள்ளி கால அடையாளமாக திகழ்ந்து வருவது 'கேம்லின்' ஸ்டேஷனரி நிறுவனத்தின் எழுதுபொருட்கள்.  பள்ளி வாழ்வில் முக்கியமான ஒன்றாக கேம்லின் ஸ்டேஷனரி நிறுவனத்தின் எழுது பொருட்கள் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ், ஓவியம் வரைவதற்கான பொருட்கள் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் தண்டேகர் மும்பையில் வசித்து வந்தார். 1931 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட  கேம்லின்  நிறுவனம் ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது.

90s Kids Favorite; The chairman of Camlin Company has passed away

86 வயதான சுபாஷ் தண்டேகர் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைப் பலனின்றி சுபாஷ் தண்டேகர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது மறைவுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் தேவேந்திர பட்நாயக் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story

ஆளுநருடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Union Minister Amit Shah consultation with the Governor

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி  5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் ஆர். என். ரவி நேற்று (16.07.2024) பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (17.07.2024) ஆளுநர் ஆர். என். ரவி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Union Minister Amit Shah consultation with the Governor

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஆளுநர் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள்,  மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ  சந்திப்பை மேற்கொண்டேன்.  நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கொலை சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பலரும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பி வரும் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.