ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவு குறித்து, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்து வருகிறார். அதில் சட்டப்பிரிவு 370, 35A- ஆல் காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 42,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட முடிவு, மிகவும் யோசித்து எடுக்கப்பட்ட முடிவு என தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35Aஐ மத்திய அரசு நீக்கியதன் மூலம் காஷ்மீர் மாநிலத்தில் ஐஐடி,ஐஐஎம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், எய்ம்ஸ் மருத்துவமனை, இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை காஷ்மீர் மக்களுக்கு உறுதி செய்யப்படும் என பேசினார். முந்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்த காஷ்மீர் சட்டங்களால் காஷ்மீர் மாநில மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.