Published on 07/08/2022 | Edited on 07/08/2022

காவல் நிலையத்திற்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த தலைமை காவலரை சரிமாரியாக தாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் அதிகளவில் சமூகவலைதளங்களில் பரவிவருகிறது.
டெல்லி, ஆனந்த் விஹார் காவல் நிலையத்திற்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த தலைமை காவலர் பிரகாஷை என்பவரை சரமாரியாக தாக்கியது. மேலும், அவரை மன்னிப்பு கேட்க வைத்தது. இதனை அந்த கும்பல் வீடியோவாக பதிவிட்டிருந்தது. அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து, அந்த வீடியோ ஆதராத்தைக் கொண்டு டெல்லி, ஆனந்த் விஹார் காவல்துறையினர் சதீஷ்குமார் எனும் வழக்கறிஞரை கைது செய்துள்ளனர். மேலும், அந்த கும்பலில் இருந்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக டெல்லி காவல் உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.