Published on 15/04/2021 | Edited on 15/04/2021

எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு ஏப்ரல் 18- ஆம் தேதி நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில், மருத்துவ மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் மருத்துவக் கல்விப் பிரிவு, வியாழக்கிழமை (ஏப். 15) தெரிவித்துள்ளது. நீட் தேர்வு குறித்த அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.