Skip to main content

மத்திய அமைச்சரவையில் யார் யார்? மாலை 04.30 மணிக்கு தெரிந்து விடும்!

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனால் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. டெல்லியில் இன்று மாலை 07.00 மணியளவில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்கிறார். இவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர்.இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் எத்தனை பேர் இடம் பெறுவார்கள்? எந்தெந்த கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? எந்தெந்த இலாக்காக்கள்? என்பது தொடர்பான விவரங்கள் இது வரை வெளியாகவில்லை.

 

MODI CABINET

 

 

இதனால் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் மாலை 04.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர். அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்கும் உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்வார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதன் பிறகு மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் முழு தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்