Published on 01/10/2019 | Edited on 01/10/2019
பிரதமர் மோடி கடந்த ஒருவார காலத்தில் இரண்டு முறை தமிழ் குறித்து பெருமிதம் தெரிவித்த நிலையில், தமிழ் குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ்தான் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று என்று தெரிவிக்கும் வரை, நான் அது பற்றி அறியாமல் இருந்து விட்டேன். இதற்காக வெட்கப்படுகிறேன். இப்படியான ஒரு சிறந்த மொழியையும் அதன் பெருமையையும் மொத்த இந்தியாவுக்கும் பரப்பிட வேண்டும். நான் ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில்தான் பயின்றேன். அப்போதே, தமிழ் படித்திருக்க வேண்டும். ஆனால் திட்டுவதற்காக, உடன் படிக்கும் மாணவர்களிடம் இருந்து சில வார்த்தைகளை மட்டுமே, கற்றுக் கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.