இந்திய நாடாளுமன்றத்தில், மன்ற நிகழ்வுகளை ஒளிபரப்ப இரண்டு தொலைக்காட்சிகள் செயல்பட்டு வந்தன. இதில் லோக்சபா டிவி, மக்களவை நிகழ்வுகளையும், ராஜ்யசபா டிவி, மாநிலங்களவை நிகழ்வுகளையும் ஒளிபரப்பி வந்தன. இந்த இரண்டு தொலைக்காட்சிகளையும் ஒன்றிணைக்க, குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடுவும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் இணைந்து குழு ஒன்றை அமைத்தனர். அந்தக் குழு, இரண்டு தொலைக்காட்சிகளையும் இணைப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்தனர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் இரண்டு தொலைக்காட்சிகளும் தற்போது இணைக்கப்பட்டு அதற்கு ‘சன்சாத் டி.வி’ (SANSAD TV) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை நாளை மறுநாள் குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.