கேரள மாநிலத்தின் சங்கனாச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னை தனது கணவர் கட்டாயப்படுத்தி வேறு ஒரு நபருடன் உடலுறவு வைத்துக்கொள்ள செய்ததாகவும், தான் இயற்கைக்கு மாறான உடலுறவிற்கு உட்படுத்தப்பட்டதாகவும் புகாரளித்தார். இதனையடுத்து இந்தப் புகாரை விசாரித்த கேரள காவல்துறையினர், புகாரளித்த பெண்ணின் கணவரையும், கணவரின் நண்பர்களையும் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெலிகிராம் மற்றும் மெசஞ்ஜர் குழுக்கள் மூலம் ஆயிரக்கணக்கான நபர்கள், தங்களது மனைவிகளை உடலுறவிற்காக மாற்றிகொண்டது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஏழு பேரை கைது செய்துள்ள கேரள போலீஸார், 25 பேரை கண்காணித்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளதாகவும் போலீஸார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த விகாரம் குறித்து ஐ.ஏ.என்.எஸ் செய்தி முகமையிடம் பேசியுள்ள கேரள காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர், "முதலில் டெலிகிராம் மற்றும் மெசஞ்சர் குழுக்களில் இந்த நபர்கள் சேர்ந்துள்ளனர். பின்னர் இரண்டு அல்லது மூன்று ஜோடிகள் சந்தித்து பேசியுள்ளனர். அதன்பின்னர் மனைவிகளை உறவு வைத்துக்கொள்வதற்காக மாற்றிக் கொண்டுள்ளனர். சிலர் பணத்தை பெற்றுக்கொண்டு திருமணம் ஆகாத நபர்களுடன் தங்கள் மனைவிகளை ஒருநாள் அனுப்பியுள்ளனர். ஒரேநேரத்தில் மூன்று நபர்கள் ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டுள்ள சம்பவங்களும் நடைபெற்றுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.